திரையுலகின் சிறந்த ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இதுவரை பணிபுரிந்த நடிகர்களிலே ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மோகன் லால் ஆகியோர் தான் சிறப்பானவர்கள் என்று பதிவு செய்துள்ளார். தர்பார் படத்தில் சந்தோஷ் சிவன் தான் ஒளிப்பதிவாளர் என்பது நாம் அறிந்தவையே. இதற்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் தளபதி படத்தில் பணிபுரிந்தார் என்பது கூடுதல் தகவல். 

santhoshsivan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு, பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ், யோக்ராஜ் சிங் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் இரண்டு போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியது. மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

rajini

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு முடிவடைந்ததென பதிவு செய்துள்ளனர் லைக்கா நிறுவனம். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது என அனிருத் தெரிவித்திருந்தார். முழுவீச்சில் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

rajini