பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

RJ Balaji on Nayanthara Role Mookuthi Amman

இதனை தொடர்ந்து RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயரிட்டுள்ளது.நயன்தாரா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

RJ Balaji on Nayanthara Role Mookuthi Amman

இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய RJ பாலாஜி இந்த படத்தில் நயன்தாரா நடிப்பது குறித்து பேசியுள்ளார்.இந்த படத்தில் நயன்தாரா மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.எப்படி விஜய் நண்பன் படத்தில் நடித்ததை அடுத்து கல்வி குறித்த ஒரு விழிப்புணர்வு பெருகியதோ,அஜித் நேர்கொண்ட பார்வையில் நடித்தபோது பெண்கள் பாதுகாப்பு குறித்து ஒரு விழிப்புணர்வு வந்ததோ.

RJ Balaji on Nayanthara Role Mookuthi Amman

அதேபோல் இந்த படத்தில் ஒரு முக்கிய கருத்து இருக்கிறது அதனை பெரிய அளவில் கொண்டுசேர்க்க நயன்தாரா போன்ற ஒரு நட்சத்திரம் தேவை என்று RJ பாலாஜி தெரிவித்துள்ளார்.

RJ Balaji on Nayanthara Role Mookuthi Amman