பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கி தற்போது ஹீரோவாக உருவெடுத்து நிற்பவர் ரியோ ராஜ்.சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Rio Badri Venkatesh Film Senior Actors Join Cast

இதனை தொடர்ந்து அதர்வா நடித்த பாணா காத்தாடி,செம போத ஆகாத உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் ரியோ ஹீரோவாக நடிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு  இசையமைக்கிறார்.

Rio Badri Venkatesh Film Senior Actors Join Cast

இந்த படத்தை பாசிட்டிவ் ப்ரிண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பாலசரவணன்,முனீஷ்காந்த்,ரோபோ ஷங்கர்,ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.தற்போது இந்த படத்தில் விஜி சந்திரசேகர்,சந்தான பாரதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.