இந்திய வங்கிகளில் 3 மாதங்களில் 32 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளில் பதிவான மோசடிகள் குறித்து கேள்வி கேட்டிருந்தார். இந்த கேள்விககு நாட்டு மக்களையே அதிர வைக்கும் அளவுக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

RBi

அதன்படி, 2019 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும், இந்தியாவின் 18 பொதுத்துறை வங்கிகளில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 480 வழக்குகளின் மூலம் 31,898.63 கோடி ரூபாய் அளவிலான மோசடிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், ஸ்டேட் வங்கியில் மட்டும் 12 ஆயிரத்து 12 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடியில், ஆயிரத்து 197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்தப்படியா, அலகாபாத் வங்கி 381 வழக்குகள் மூலம் 2,855.46 கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கி 99 மோசடிகள் மூலம் 2,526.55 கோடி ரூபாய் மதிப்புள்ள மோசடிகளும் பதிவாகியுள்ளது. இப்படியாக, இந்தியா முழுவதும் உள்ள 18 பொதுத்துறை வங்கிகள் மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

RBi

மேலும் பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, சென்டல் பேங்க் ஆஃப் இந்தியா, யுனைட்டெட் பாங்க் ஆஃப் இந்தியா, கார்பரேஷன் வங்கி, இந்தியன் ஒவர்சீஸ் வங்கி, சின்டிகேட் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, மகாராஷ்டிரா வங்கி, ஆந்திரா வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் சிந்த் வங்கி ஆகிய வங்கிகளும் இந்த வங்கி மோசடிகளால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மோசடி தொடர்பாக பொதுத்துறை வங்கிகள் இதுவரை எதுவும் பேசாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.