எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ராதாமோகன் இயக்கும் புதிய பொம்மை படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கிறார்கள்.

bommai

காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது.

priyabhavanishankar priyabhavani

தற்போது படத்தின் நாயகியான பிரியா பவானி சங்கர் தனது காட்சிகளை முடித்துவிட்டதாக பதிவு செய்துள்ளார். ஏற்கனவே மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.