தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் சரித்திர படம் சயீரா நரசிம்ம ரெட்டி.இந்த படத்தை அவரது மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிக்கிறார்.அமித் த்ரிவேதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Sye Raa Making

Ram Charan Sye Raa

அமிதாப் பச்சன்,விஜய் சேதுபதி,நயன்தாரா,தமன்னா,ஜெகபதி பாபு,கிச்சா சுதீப் என இந்தியாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.பெரும் பொருட்செலவில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

Amitabh Bachchan Sye Raa

Vijay Sethupathi Sye Raa

Nayanthara Sye Raa

Tamanna Sye Raa

இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் டீஸர் நாளை வெளியாகவுள்ளது.தற்போது இந்த படத்திற்காக தெலுங்கின் முக்கிய நடிகர்களில் ஒருவரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் ஒரு முக்கிய பகுதிக்கு வாய்ஸ்ஓவர் கொடுத்துள்ளார்.இந்த வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.