இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவான படம் நேர்கொண்ட பார்வை. ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

sitrarasu

அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் ட்ரைலர் மற்றும் நான்கு பாடல்கள் வெளியாகி அனைவரையும் ஈர்த்தது. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் தல ரசிகர்கள்.

sitrarasu

இன்று படத்தின் பிரஸ் காட்சி சென்னையில் காலை 10 மணியளவில் திரையிடப்பட்டது. சீரான கருத்தை படத்தில் வெளிப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர். நிச்சயம் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும் படமாக, பாடமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

chittu

கதையில் உண்மை சுவாரஸ்ய கூறுகள் அதிகமிருப்பது போல். படத்தில் நமக்கு பரிட்சயமான நட்சத்திரங்களும் நடித்து அசத்தியுள்ளனர். பிரபல புகைப்பட கலைஞர் சிற்றரசு அவர்களும் வக்கீல் பாத்திரத்தில் நடித்திருந்தார். இதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. அறியாதவர்களின் பார்வைக்கு கொண்டுவருவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.

ஏற்கனவே இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்திலும் வக்கீல் பாத்திரம் ஏற்று சிறிது நேரம் திரையில் தோன்றினார். நேர்கொண்ட பார்வை படத்தில் ஸ்டில் கலைஞராக பணியாற்றியுள்ளார் சிற்றரசு.

வேறு துறை சார்ந்து இருந்தாலும், நடிப்பில் ஆர்வம் காட்டுவது தனித்திறமையே. ஸ்பாட்டில் தனது மூன்றாம் கண்(கேமரா) மூலம் படம் பிடிப்பவர், நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துகிறோம்.