இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Naan Sirithal First Single Releases on December 7

இந்த இரண்டு படங்களையுமே இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்குகிறார்.ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

Naan Sirithal First Single Releases on December 7

நான் சிரித்தால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினையும் இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.தற்போது இந்த படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.