தமிழ் சினிமாவின் legendry இயக்குனராய் மக்கள் மனதில் பல ஆண்டுகள் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குனர் மணிரத்னம். அமைதியான திரை சூழல், மனதை வருடம் வசனங்கள், சீரான கதை கரு என தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பெருமை இவரை சேரும். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச் சிவந்த வானம். உச்ச நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

இயக்கம் அல்லாது தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அடுத்த படம் வானம் கொட்டட்டும் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தனா இயக்கிவருகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.

சித் ஸ்ரீராம் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதி துவங்கி சிறப்பாக நடந்து வருகிறது. தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து பிரத்தியேக புகைப்படம் வெளியானது. அதில் இயக்குனர் மணிரத்னம், ராதிகா, சரத்குமார், சுஹாசினி ஆகியோர் உள்ளனர்.