பேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் பொங்கல் 2020க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

rajini

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார். நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

manasvi

படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. தற்போது இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த மழலை நட்சத்திரம் மானஸ்வி கலாட்டா குழுவிற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் தர்பார் படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றி பேசியுள்ளார். வீடியோ லிங்க் கீழே உள்ளது.