மாநகரம் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ளார். டைட்டில் முடிவாகாத இந்த படத்திற்கு தளபதி 64 என தலைப்பு வைத்துள்ளனர் படக்குழுவினர். பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோஹனன் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

lokesh

thalapathy64

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் சாந்தனு தளபதி விஜயுடன் சேர்ந்து நடிக்கவுள்ளனர். இம்மாதம் அக்டோபர் 3-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக தகவல் நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது. அனிருத் இசையமைக்கிறார்.

malavikamohanan

லோகேஷ் கைவசம் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் வெளியாகவுள்ளது. விரைவில் படம் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.