YSR ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படமான மாமனிதன் பூஜையுடன் துவங்கியது. படத்தில் காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். 

vijaysethupathi

படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், யுவுனும் சேர்ந்து இசையமைக்கிறார்கள். இசையமைக்கும் பணி இன்னும் துவங்கவில்லை என்பது கூடுதல் தகவல். மைனா, பைரவா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

sethu

இப்படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறாராம். மேலும் ஜோக்கர் பட புகழ் குரு சோமசுந்தரம் விஜய் சேதுபதியின் நண்பராக நடிக்கிறார். இஸ்லாமிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் சமீபத்தில் தெரியவந்தது.

sethupathi

தற்போது இயக்குனர் சீனு ராமசாமி, மாமனிதன் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். விஜய்சேதுபதி கைவசம் லாபம், கடைசி விவசாயி, துக்லக் தர்பார், கா.பெ. ரணசிங்கம் போன்ற படங்கள் உள்ளது.