நடிகர் STR மற்றும் ப்ளூப்பர் புகழ் இயக்குனர் வெங்கட் பிரபு இணையும் படம் மாநாடு. இப்படத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. எப்போதும் தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளார். 

maanadu

கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலை பயணத்திற்கு பிறகு நீச்சல், உடற் பயிற்சி என ஸ்லிம்மாக மாறி வருகிறார் சிம்பு. 

Kichcha Sudeep

kichchasudeep

தற்போது மாநாடு படத்தில் STR-க்கு வில்லனாக நடிக்க கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப்பை அணுகியதாகவும், அந்த கேரக்டர் அவருக்கு மிகவும் பிடித்ததாகவும் நடிக்க ஒப்புக்கொண்டார் என இணையதளவாசி ஒருவர் கிளப்பிவிட்டுள்ளார். இச்செய்தி முற்றிலும் தவறு என நடிகர் கிச்சா சுதீப் பதிவு செய்துள்ளார். இறுதியாக சிம்புதேவன் இயக்கிய புலி படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.