யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப். இந்தப் படம் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியானது. கடந்த வருடம் (2018) டிசம்பர் 21-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியிடப்பட்டது. 

vchennai

chennai

யஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, அனந்த் நாக், வசிஷ்டா, சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம், பெரும்பாலான ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும். பாக்ஸ் ஆபீஸிலும் வசூலைக் குவித்தது.

vaada

கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் சில நாள் முன்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தின் பூஜை பெங்களூரு விஜய நகரில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போது வெளியான செய்தி என்னவென்றால், வடசென்னை படத்தில் நடித்த சரண் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.