காரில் தாய் மடியில் தூங்கிய குழந்தை தவறி ரோட்டில் விழுந்த சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

கேரளா மாநிலம் இடுக்கி மலைப்பாதையில் ஒரு குடும்பத்தினர், கை குழந்தையுடன் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, இடுக்கி மலைப்பாதை வளைவில் கார் திரும்பும்போது, காரில் தாயின் மடியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த கை குழந்தை, எதிர்பாராத விதமாகத் தவறி ரோட்டில் விழுந்துள்ளது.

baby falls

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த தாய், குழந்தை கீழே விழுவதைக் கவனிக்காமல் தூக்கத்திலேயே இருந்துள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதில், குழந்தை ரோட்டில் தவறி விழுந்ததும், அழுதுகொண்டே ரோட்டின் இருபுறமும் மாறி மாறி தவழ்ந்து சென்றது.

ரோட்டின் ஒருபுறம் சென்று விட்டு, திரும்பி ரோட்டின் மறுபுறம் குழந்தை வந்தது. அப்போது, அந்த இடத்தில், நாய் அல்லது பூனை போன்ற ஒன்று குழந்தையைப் பார்த்ததும் அங்கிருந்து ஓடுகிறது. இந்த காட்சிகள் எல்லாம் அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளன. இதனைக் கண்ட வனத்துறை அலுவலர்கள், உடனடியாகச் சென்று குழந்தையை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கார் சிறிது தூரம் சென்றதும் சில மணி கழித்து உறக்கத்திலிருந்து விழித்த தாய், குழந்தையைக் காணவில்லை என்று பதறியுள்ளார். இதனையடுத்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை, போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

baby falls

இதனிடையே, காரிலிருந்து சாலையில் விழுந்த குழந்தை, தவழ்ந்து செல்லும் சிசிடிவி காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.