கீர்த்தி சுரேஷ் படத்தின் தற்போதைய நிலை !
By Aravind Selvam | Galatta | August 08, 2019 17:10 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படம் பல விருதுகளை இவருக்கு வாங்கி கொடுத்தது.
தற்போது போனி கபூர் தயாரிக்கும் ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.இது தவிர தமிழ் தெலுங்கில் உருவாகும் கீர்த்தி 20 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடித்து வருகிறார்.நதியா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை நரேந்திரநாத் இயக்குகிறார்.இந்த படத்தை விஜயதசமிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் வரும் நாட்களில் அடுத்தடுத்து அப்டேட் வெளிவர உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.
DIRECTING #Keerthy20 !!
— Narendra Nath (@NARENcloseup) August 6, 2019
Shoot in progress! Can’t wait to reveal more updates. @KeerthyOfficial in full flow, the most talented & determined actress ever. @smkoneru the most passionate person for cinema!@THARUNDirects @MusicThaman @dancinemaniac @sahisuresh pic.twitter.com/hREdJ0336b