தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் இவர் நடித்த ராட்சசி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் நடித்து இன்று வெளியாகியுள்ள ஜாக்பாட் படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜோதிகா அடுத்ததாக கார்த்தி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்திலும்,சூர்யா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் இயக்கிவரும் பொன்மகள் வந்தால் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து கத்துக்குட்டி பட இயக்குனருடன் இவர் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.ஜோதிகா சசிகுமாரின் அக்காவாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.மேலும் இந்த படத்தில் சூரி மற்றும் சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.