ஜீவா,அருள்நிதி இருவரும் இணைந்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய ராஜசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர்,மஞ்சிமா மோகன் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இது சூப்பர் குட் பிலிம்ஸின் 90ஆவது படம்.இந்த படத்தின் Firstlook இன்று வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

தற்போது இந்த படத்தின் Firstlook வெளியாகியுள்ளது.இந்த Firstlook போஸ்ட்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.இந்த படத்திற்கு களத்தில் சந்திப்போம் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.கபடி போட்டியை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது என்று தெரிகிறது.