விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

விண்வெளிக்கு மனிதனை இந்தியா இதுவரை அனுப்பியதில்லை. ஆனால், உலகின் பல்வேறு நாடுகளின் சார்பில் இந்தியர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வந்திருக்கிறார்கள். தற்போது முதன் முறையாக இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

ISRO shortlisting

அதன்படி வரும் 2022 ஆம் ஆண்டு, இந்தியா சார்பில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு, ககன்யான் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்தின்படி 3 பேர் விண்வெளிக்குச் செல்ல உள்ளனர். அதில் ஒருவர் பெண்ணாக இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, 5 முதல் 7 நாட்கள் வரை விண்வெளியில் தங்கியபின் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இத்திட்டத்திற்காக வீரர்கள் தேர்வு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதற்கான விமானப்படையில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட வீரர்களுக்குத் தகுதி சோதனை நடைபெற்றது. இதில், உடல் தகுதி, மனதிடம் உள்ளிட்ட பல சோதனைகள் நடத்தி 30 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ISRO shortlisting

இவர்கள் அனைவரும் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டு, அங்கு ஓராண்டு பயிற்சி பெறுவார்கள் என்றும், அதன்பிறகே, 30 பேரிலிருந்து 3 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வீரர்களின் தேர்வு, பெங்களூரில் நடைபெற்று முடிந்துள்ளது.