ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் இந்தியன் 2. உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இது. 

indian2

படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் ஓய்வில் இருந்தார். அறுவை சிகிச்சை முடிந்த கையோடு ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தால் சரியாக வராது என டூப் போட்டுக் கொள்ளலாம் என்று ஷங்கரிடம் கமல் கூறினாராம். 

kamal

தற்போது சென்னையில் நடக்கும் இதன் படப்பிடிப்பில் நடிகர் விவேக் நடிக்கும் காட்சிகள் படமாக்கி வருவதாக தகவல் தெரியவந்தது. ஜனவரி 5-ம் தேதி நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் உலகநாயகன் கமல் பங்கேற்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.