2018-ல் உலக BoxOffice-ல் சக்கை போடு போட்ட திரைப்படம் Avengers Infinity War. Superhero படங்களை தயார் செய்யும் Marvel நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இந்த படம் இந்தியாவிலும் வசூலை அள்ளி குவித்தது.

Marvel Superhero படங்களுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழில் நல்ல வரவேற்பு கிடைப்பதை உணர்ந்த தயாரிப்பு நிறுவனம்,பிரபல இயக்குனரான A.R.முருகதாஸை Avengers EndGame பதிப்புக்கு வசனம் எழுத ஒப்பந்தம் செய்தது.தற்போது இந்த படத்திற்காக ஒரு சிறப்பு பாடலை இசையமைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை மார்வெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

Marvel Anthem என்று பெயரிடப்பட்ட இந்த பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இந்த பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரே பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் உலகளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.