தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர் என்பதை கடந்து மனதிற்கு இனிமையான பாடல்களை தந்த இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றவர் ஜி.வி. பிரகாஷ். வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இன்று வரை ஃபுல் ஃபார்மில் உள்ளார். பொல்லாதவன், மதராசப்பட்டினம், தலைவா, மயக்கம் என்ன என இவரது படைப்புக்கள் ஏராளம். 

gvprakash

இறுதியாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தின் பாடல்கள் அமோக வரவேற்பை பெற்றது. கிடைக்கும் கேப்பில் நடிப்பிலும் பட்டையை கிளப்பி வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் குப்பத்து ராஜா, வாட்ச்மேன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்கள் வெளியாகின. ஆயிரம் ஜென்மங்கள், ஜெயில், ஐங்கரன் ஆகிய படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. 

gvprakash

இந்த பத்து ஆண்டுகள் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவனில் துவங்கி அசுரனில் முடிவடைந்துள்ளது என பதிவு செய்துள்ளார். தலைவி மற்றும் சூர்யா நடிக்கும் சூரரை போற்று ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.