தமிழக வரலாற்றில் தங்கத்தின் விலை முதன் முறையாக 30 ஆயிரம் ரூபாயைக் கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

பொருளாதார மந்த நிலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காரணமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல், 13 ஆம் தேதி வரை தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து நாட்களில் தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாகக் காணப்பட்ட நிலையில், கடந்த 4 நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டது.

Gold

இந்நிலையில், சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 922 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்து, 30 ஆயிரத்து 120 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 729 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 2 ரூபாய் 60 காசுகள் உயர்ந்து, 55 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல், ஒரு கிலோ வெள்ளி 55 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் வீழ்ச்சியடைந்தால், இன்னும் ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாயைத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால், வாடிக்கையாளர்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளனர்.