தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.மேகா ஆகாஷ் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.டர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமமைத்துள்ளார்.Escape Artist நிறுவனம் சார்பாக மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

ENPT Release Postponed

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.சசிகுமார்,சுனைனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பல காரணங்களால் பல முறை தள்ளிபோன இந்த படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர்.

ENPT Release Postponed

பல பிரச்சனைகளை கடந்து ஒரு வழியாக இந்த படம் ரிலீஸாகவுள்ளது என்று கெளதம் மேனன் ரசிகர்களும்,தனுஷ் ரசிகர்களும் ஆனந்தத்தில் இருந்தனர்.ஆனால் மீண்டும் பிரச்சனை படத்தை தொற்றிக்கொண்டுள்ளது.

ENPT Release Postponed

இந்த படத்தின் ரிலீசுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று பிரபல திரையரங்கின் உரிமையாளர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.இன்னும் படத்தின் பிரச்சனைகள் முடிவுக்கு வராததால் மேலும் அறிவிப்புகள் வரும் வரை ரசிகர்கள் காத்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.

ENPT Release Postponed