கைதி படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ள கார்த்தி அடுத்ததாக ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை Dream Warrior Pictures சார்பாக S.R.பிரபு தயாரிக்கிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Dream Warrior Issues Statement on Sultan Shoot

விவேக் - மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்தில் சதிஷ்,பொன்னம்பலம்,நெப்போலியன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Dream Warrior Issues Statement on Sultan Shoot

இந்த படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடைபெற்று வந்தது.அப்போது இது திப்புசுல்தான் வலராற்று படம் என்று எண்ணி சில அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.இது அதுபோன்ற வலராற்று படம் இல்லை என்று படக்குழுவினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.

Dream Warrior Issues Statement on Sultan Shoot

சிலர் விளம்பரத்துக்காக திரைப்படங்களை குறிவைத்து வருகின்றனர் என்றும்.ஒரு படத்தில் என்ன இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை தணிக்கை குழுவினருக்கும்,படத்தின் படைப்பாளிக்கும் மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.