தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி S தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார். 

DhanushVetri

தனுஷ் இரட்டை வேடமிட்டு நடிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடிகர் கருணாஸ் மகன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது நாம் அறிந்தவையே. படப்பிடிப்பு பணிகளை முடித்து போஸ்ட் ப்ரோடக்ஷனில் கவனம் செலுத்த உள்ளனர். நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

dhanush

இரண்டு பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ் அசுரன் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் பகிர்ந்தார். பிறகு வடசென்னை இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என்றார்.