சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படத்தை AR முருகதாஸ் இயக்க உள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ், யோக்ராஜ் சிங் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர். 

darbar

பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார். படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியது. மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.

darbar

தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி தர்பார் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இமைக்கா நொடிகள் படத்தில் மானஸ்வி நடித்த பாத்திரம் வெகுவாக ஈர்த்தது.

kottachi