விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் இன்று வெளியாகியுள்ளது.இந்த படத்தை சதுரங்க வேட்டை,தீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார்.

போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்றும் தளபதி விஜயின் பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.