மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆடை.இந்த படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடித்துள்ளார்.ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படம் இதுதான்.இந்த படத்தை V ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Amala Paul Aadai P Suseela Records A Devotional Song

இந்த படத்தின் Firstlook சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ஜூலை 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Amala Paul Aadai P Suseela Records A Devotional Song

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது அடுத்த பாடல் குறித்த தகவலை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.இந்த பாடலை பழம்பெரும் பாடகி பி.சுசீலா பாடியுள்ளார் என்றும் அவர் 70 வருடங்களுக்கு முன் பாடிய பக்தி பாடலை எங்கள் படத்திற்காக மீண்டும் பாடிக்கொடுத்தது பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.