அபிராமியை ஒதுக்கிய முகென் ! பிரேக்கப் ப்ரோமோ
By Sakthi Priyan | Galatta | August 05, 2019 09:00 AM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில், முகெனை நினைத்து அபிராமி அழுகிறார். இருவருக்கிடையே காதல் முறிந்ததா என்ற கேள்வியில் உள்ளனர் ரசிகர்கள்.
#Day43 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/FyrVqY2aUA
— Vijay Television (@vijaytelevision) August 5, 2019