இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்த படம் தான் 96. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100-வது நாளை எட்டியுள்ளது. பள்ளி பருவ காதல், நட்பை வைத்து அழகாக மக்கள் மனதை வருடியது 96.

96 Movie Remake Update Revealed Indicating The Crew And Shoot Dates

இப்படத்தில் நடித்த அனைத்து கதா பாத்திரங்களும் ரசிகர்களை ஈர்த்தது. இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. ராம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, ஜானு என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் த்ரிஷா அந்த கேரக்டராகவே வாழ்ந்து நமது பள்ளி பருவத்தை நினைவு படுத்துகிறார்கள். மேலும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மேனனின் பின்னணி இசை நம் செவிகளைத்தாண்டி ஆழ் மனதை தொடும் வகையில் அமைந்தது.

96 Movie Remake Update Revealed Indicating The Crew And Shoot Dates

தெலுங்கில் ரீமேக்காகும் இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து துவங்கப்படும் என்ற செய்தி நெருங்கிய திரை வட்டாரங்களில் இருந்து தெரியவந்தது.

96 Movie Remake Update Revealed Indicating The Crew And Shoot Dates