கொரோனா வைரசின் 3 ஆம் அலையில், இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரசின் கோரிப் பிடியில் இருந்து இன்னமும் உந்த உலக நாடும் முழுமையாக மீண்டு வரவில்லை. ஆனால், அதே நேரத்தில், நாளுக்கு நாள் புதிது புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் குறித்து தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில், டெல்டாவை விடவும் பயங்கரமான லாம்ப்டா வகை கொரொனா வைரஸ், உலகின் 30 நாடுகளில் வேகமாகப் பரவி உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை விடுத்து, அது தொடர்பான ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் நடந்துகொண்டு இருக்கிறது.

அதே நேரத்தில், மற்றொரு புறம் சீனாவில் உருவானதாகக் கூறப்படும் கொரோனா என்னும் கொடிய வைரஸ், இன்று உலகம் முழுக்க பரவி, அது தற்போது 2 வது அலை, 3 வது அலை என்று மீண்டும் மீண்டும் புதிய புதிய வடிவம் எடுத்துப் பரவிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் என்னும் தொற்று நோயால், உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது.

மற்ற உலக நாடுகளைக் காட்டிலும், பிரான்ஸ் நாட்டில் ஏற்கனவே 3 அலைகளாக உருமாறி கொரோனா வைரஸ், பல லட்சம் உயிர்களைப் பழி கொண்டு, தற்போது பிரான்ஸ் நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் கொரோனா, தனது கோர முகமான 4 வது அலையாக உருவெடுக்கும் என்று, அறிவியல் ஆலோசகர் ஒருவர் அதிர்ச்சியான தகவலைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

ஆனால், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் 2 அலை சற்று ஓய்ந்திருந்தாலும், மெக்சிகோ நாட்டில் கொரோனாவின் மூன்றாம் அலை அங்கு வேகம் எடுத்து வருகிறது. இந்த 3 வது அலையில், இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, மெக்சிகோ நாட்டின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் பேசும் போது, “கோவிட் 3 ஆம் அலையில் இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இதனால், இளம் வயது கொண்டவர்கள் தற்போது அதிகம் பாதுகாப்பாக இருப்பது மிக அவசியம்” என்றும், வலியுறுத்தி உள்ளார்.

அத்துடன், “மெக்சிகோ நாட்டை பொறுத்தமட்டில், எளிதில் நோய் தாக்கும் நபர்களைக் காட்டிலும், பதின் பருவம் மற்றும் இளம் வயதினர் அதிகமானோர் கொரோனா பெருந்தொற்றினால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்” என்றும், அவர் கலைவத் தெரிவித்தார். 

மேலும், “கடந்த வாரம் மெக்சிகோவில் கொரோனா 3 வது அலை தாக்கி தொடங்கியதாக” அந்நாட்டின் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், “மெக்சிகோ நாட்டில் இதற்கு முன்பு வந்த கொரோனா 2 அலைகளுடன் ஒப்பிடுகையில், தற்போது 29 சதவீதம் அதிகரித்துக் காணப்படுகிறது என்றும், மெக்சிகோவில் தடுப்பூசி திட்டம் 30 வயதுக்கு உட்பட்டோருக்கு இன்னமும் சரிவரச் சென்று சேரவில்லை” என்றும், கூறப்படுகிறது.

குறிப்பாக, “கொரோனா 3 ஆம் அலையில், 30 - 39 வயதிற்குப்பட்டவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்படுவது தற்போது அங்கு இரு மடங்காக அதிகரித்து உள்ளது என்றும், தடுப்பூசி சரிவர கிடைக்காததும் இதற்கு முக்கிய காரணம் என்றும், குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.

மிக முக்கியமாக, “மெக்சிகோ நாட்டில் கோவிட் வைரசால் பாதிக்கப்பட்டு இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளதாக” அந்நாட்டின் 
சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.