“இனி ஆபாசப் படங்களில் நடிக்க மாட்டேன்” என்று, பிரபல ஆபாசப் பட நடிகை மியா கலீஃபா ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளார். 

ஆபாசப் படங்களில் நடித்து பெயரும், புகழும் பெற்றவர் நடிகை மியா கலீஃபா. 

தற்போது, ஆபாச நடிகை என்ற தன் மீது இருக்கும் பிம்பத்தை மாற்ற முயன்று வரும் நடிகை மியா கலீஃபா, இந்தியாவில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது ஆதரவை தெரிந்து இன்னும் பரபரப்பாக பேசப்பட்டார். இதற்காக, பல எதிர்ப்புகள் வந்த நிலையிலும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த மியா கலீஃபா, “விவசாயிகளின் குரல் நிச்சயம் வெளியில் கேட்க வேண்டும்” என்று, தனது கருத்தில் கடைசி வரை உறுதியாக இருந்து வருகிறார். 

இப்படியான நிலையில் தான், தன்னுடைய கடந்த கால மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்தும், தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்தும் அந்நாட்டின் ஊடகத்திற்கு மனம் திறந்து பேசி உள்ளார்.
 
அதில், “எனது வாழ்க்கையில் மோசமான மற்றும் நான் மறக்க நினைக்கும் தருணங்கள் என்பது, நான் ஆபாசப் படங்களில் நடித்தது மட்டுமே” என்று,
குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், “எனது வாழ்க்கையையே புரட்டிப் போட்ட நாள் என்றால், நான் முஸ்லிம் பெண்கள் பயன்படுத்தும் ஹிஜாப் அணிந்து கொண்டு நடித்த அன்று தான்" என்றும், அவர் கூறி உள்ளார்.

“ 'நீங்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு ஆபாசக் காட்சியில் நடிக்க வேண்டும்' என்று என்னிடம் சொன்ன போது, 'நான் அப்படி ஒரு காட்சியில் நடித்தால் நான் கொல்லப்படுவேன்' என்று, அவர்களிடம் கூறினேன். ஆனால், அதனைக் கேட்டு அவர்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள்" என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

“ஆனால் அப்படி நான் நடிக்க மாட்டேன் எனச் சொல்வதற்குத் தயக்கமாகவும், சிறிது பயமாகவும் இருந்தது என்றும், நான் இப்படியெல்லாம் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருந்தால், அவர்கள் என்னை கட்டாயப்படுத்தியிருக்க மாட்டார்கள் என்றும், ஆனால் அதைச் சொல்வதற்கு எனக்கு அப்போது சற்று பயமாக இருந்தது” என்றும், நடிகை மியா கலீஃபா கூறியுள்ளார்.

“குறிப்பிட்ட அந்த காட்சியை நடித்து முடித்து பிறகு அந்த ஒரு காட்சி வைரலாக பரவியது. பலரும் 'யார் அந்த பெண்?' என்று தேட ஆரம்பித்தார்கள் என்றும்,  அதன் பிறகு எனக்குப் பல கொலை மிரட்டல்கள் வந்தது என்றும், குறிப்பாக என்னைச் சுட்டுக் கொல்லப் போவதாகவும் பல வகைகளில் எனக்கு மிரட்டல்கள் வந்தன” என்றும், அந்த நடிகை கவலையுடன் தெரிவித்து உள்ளார்.

“இதனையடுத்து, அந்த ஆபாச படம் எடுக்கப்பட்டு 3 மாதம் கழித்து, எனது 24 வது வயதில் இனி மேல் ஆபாசப் படங்களில் நடிப்பது இல்லை” என்று நான் முடிவு செய்தேன் என்றும், எனது முடிவை அவர்களிடம் சொன்ன போது, எனது மனதை மாற்ற முயன்றார்கள் என்றும், ஆனால் நான் எனது முடிவில் தற்போது வரை உறுதியாக இருக்கிறேன்” என்றும், அந்த பெண் கூறியுள்ளார்.

மேலும், “ஆபாச பட உலகை விட்டு நான் வெளியே வந்த பிறகு, மனதளவில் நான் தனிமையை உணர்ந்தேன் என்றும், வெளியில் செல்வதற்குக் கூட பயமாக இருக்கிறது என்றும், என்னைப் பார்ப்பவர்கள் என்ன கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள் என்ற எண்ணம் எனது மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது” என்றும், அந்த நடிகை தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, “ஆபாசப் பட உலகில் பல பெண்களும் கடத்தப்பட்டு, ஆபாசப் படங்களில் நடிக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்” என்றும், மியா கலீஃபா பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

இதனிடையே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 1,60,000 டாலர் தொகையினை தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு மியா கலிஃபா நன்கொடையாக வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.