யாஹு நிறுவனம் 2001ல் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் பெரும்பாலனவர்கள் தங்களது இமெயில் அக்கவுண்டை யாஹுவில் வைத்திருந்தார்கள். யாஹு இணையதளமும் பெரும்பாலனவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் கூகுளில் வருகைக்கு பிறகு யாஹு இணையதளத்தை பயன்பாடுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக்கொண்டே சென்றது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே யாஹு தொடர்ந்து நிலையான சரிவை எதிர்கொண்டு வருகின்றது. கூகுள் தொடர்ந்து முன்னேறி இன்று முதல் இடத்தில் இருக்கிறது. 


இந்நிலையில் டிசம்பர் 15 முதல் மக்கள் யாஹூ உறுப்பிலிருந்து மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியாது என்று யாஹூ குரூப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபக்கம் யாஹு இணைய தளம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து இருக்கிறது. அதனால் அடுத்து இணையதளத்தையும் மூட அதிகமான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. கூகுள் நிறுவனத்துடன் போட்டியிட முடியாமல் ஏற்பட்ட இந்த சரிவால் முழு நிறுவனமும் கேள்விகுறியாகி இருக்கிறது.