மக்களிடையே வெறுப்புணர்வு அதிகரித்து வருவதால், தற்காப்புக்கு துப்பாக்கிகள் அதிகம் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்தியா உட்பட பல நாடுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் காணப்பட்டதாகப் புள்ளி விபரங்கள் கூறுகிறது என்று பார்த்தால், மக்களிடையே வெறுப்புணர்வும் பெரிய அளவில் அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. 

அதாவது, உலகம் முழுவதும் பரவிக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, தூண்டப்பட்ட ஆசிய - விரோத வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக ஆசிய - அமெரிக்கர்கள் பலரும் தங்களைத் தற்காத்துக்கொள்ளுவதற்காக, துப்பாக்கிகளை வாங்குகிறார்கள் என்று அமெரிக்காவைச் சேர்ந்த துப்பாக்கி வணிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் மினோலாவில் செயல்பட்டு வரும் ஒரு துப்பாக்கி கடையின் உரிமையாளர் ஜிம்மி காங் பேசும்போது, “துப்பாக்கிகளுடன் அதிக அளவில் ஆசியர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் என்றும், இதற்கு முன்பு, ஆசிய சமூகத்தில் ஒரு போதும் துப்பாக்கி கலாச்சாரம் இருந்ததில்லை” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

“ஆனால், கொரோனா தொற்று நோய் காரணமாக ஆசிய - விரோத வெறுப்புக் குற்றங்கள் இங்கு அதிகரித்துக் காணப்படுகிறது என்றும், இதனால் ஆசியர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் துப்பாக்கிகளை அதிக அளவில் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்” என்றும், அவர் கூறி உள்ளார்.

“கொரோனா நோய் தொற்று நோய்களின் போது, துப்பாக்கி விற்பனை இரு மடங்காக அதிகரித்து இருக்கிறது என்றும், கொரோனா தொற்று நோய் காலத்தில் நடந்த துப்பாக்கி வணிகத்தில் பாதி அளவு ஆசிய - அமெரிக்கர்களிடமிருந்து வந்த வருமானம்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “அவர்கள் பெரும்பான்மையாக பேப்பர் ஸ்பிரே பாட்டில்களையும் வாங்குகிறார்கள்” என்றும், அந்நாட்டின் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளதையும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், கலிஃபோர்னியாவின் போவேயில் இருக்கும் போவே ஆயுதங்கள் மற்றும் கியரின் பொது மேலாளர் டேனியல் ஜேம்ஸ் இது தொடர்பாகப் பேசும்போது, “ஆசிய - அமெரிக்க முதல் முறை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட தற்போது 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துக் காணப்படுகிறது” என்று, கூறியுள்ளார்.

குறிப்பாக, “முதல் முறையாகத் துப்பாக்கி வாங்குபவர்கள் பெரும்பாலும் தீவிர துப்பாக்கி உரிமையாளர்களாக மாறுகிறார்கள் என்றும், அவர்கள் புதிதாக வாங்கிய க்ளோக் பிஸ்டல்கள் மற்றும் ஏஆர் 15 வாங்கவே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்கள்.

“இது அவசரம் என்றே கோணுகிறது என்றும், இது இயல்பான நிலை இல்லை” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

முக்கியமாக, பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரம் என்பது, ஆசிய - அமெரிக்கர்களைப் பொறுத்த வரை, அச்சம் இன்னும் அதிகமாகக் காணப்படுகிறது என்றும், கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு நியாயமற்ற முறையில் ஆசிய மக்களைக் குற்றம்சாட்டும் சில இன வாதிகளின் தாக்குதல்களால்  குறிவைக்கப்படுவதே முக்கிய காரணம் என்றும், இதனால், ஆசிய எதிர்ப்புகளை அமெரிக்கர்கள் வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “ஆசியர்கள் மீதான வெறுப்புணர்வை அமெரிக்காவினர் கை விட வேண்டும்” என்று, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டு உள்ளார்.