அமெரிக்காவில் 13 வயது சிறுவனை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது டிக்டாக் பேமஸ் இளம் பெண்ணுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உள்ள இண்டியனாவில் வசித்து வரும் 19 வயதான இளம் பெண் ஜோ என்பவர், டிக்டாக்கில் அடிக்கடி வீடியோக்கள் வெளியிட்டு அமெரிக்க மக்களால் நன்கு அறியப்பட்டவராக மிகவும் ஃபேமஸ் ஆனவராக அறியப்பட்டு வருகிறார். அவருக்கு, 18 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.

அதே நேரத்தில், இளம் பெண் ஜோ, அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்தார். டிக்டாக் வீடியோக்கள் ஒரு பக்கம், காதல் மறுபக்கம் என்று, அந்த இளம் பெண்ணின் வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய் கொண்டு இருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த இளம் பெண், அதே பகுதியைச் சேர்ந்த 13 வயதான கொன்னார் என்ற சிறுவனிடம் நெருங்கிப் பழகி வந்தார். 

குறிப்பாக, அந்த சிறுவனிடம் அந்த இளம் பெண், தானாகவே வலிய சென்று நெருங்கிப் பழகி வந்தார். அவன், சிறுவன் என்று கூட பாராமல், இளம் பெண் ஜோ செய்யும் சில இந்த காரியத்தைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் காதலன், பல தருணங்களில் அறுவறுப்பு பட்டு, காதலியுடன் சண்டைக்குச் சென்று உள்ளார். இதனால், காதலனுக்கும், காதலி ஜோவுக்கும் இடையே அந்த சிறுவனால் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது. இதன் காரணமாக, காதலன் ஜோவை விட்டு பிரிந்து சென்று விட்டான். 

காதலனை தொடர்ந்து, ஜோவின் நண்பர்களும், தனது தோழி “எப்போதும் அந்த 13 வயது சிறுவனுடன் நெருக்கமாக இருக்கும் ஜோவின் செயல்பாடுகள் பார்த்து, கடும் அதிருப்தி அடைந்து, அந்த செயல்பாடுகள் பிடிக்காமல், அந்த இளம் பெண்ணை விட்டுப் பிரிந்து சென்று விட்டனர்.

அதே நேரத்தில், தனது மகள் சிறுவன் மீது கொண்ட பாசத்தினால் தான் இப்படி சிறுவனுடன் நெருங்கிப் பழகுகிறார் என்று, அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் நினைத்துக்கொண்டு இருந்தனர். 

ஆனால், அந்த சிறுவனை இளம் பெண் ஜோ, தன்னுடைய தவறான பாலியல் உறவுக்குப் பயன்படுத்திக் கொண்டு வந்து உள்ளார். இந்த குற்றச்சாட்டை தான், அந்த பெண்ணின் காதலனும் கூறியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித மறுப்பும் சொல்லாமல் இருந்த ஜோ, திடீரென டிக்டாக்கில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

அந்த வீடியோவில், “அந்த சிறுவனை, அந்த பெண் இழுத்துப் பிடித்து முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி” இருந்து உள்ளது. அந்த பெண், ஏற்கனவே டிக்டாக் பிரபலம் என்பதால், இந்த வீடியோ அந்த நாட்டில் தீயாகப் பரவியது. இதனால், அந்த இளம் பெண் சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். இதற்கு, இளம் பெண் ஜோ, தனது தரப்பு விளக்கம் ஒன்றையும் அளித்தார். 

அதில், “அந்த சிறுவனை நான் பாலியல் பலாத்காரம் செய்ய வில்லை” என்றும், கூறியிருந்தார். ஆனாலும், இளம் பெண் ஜோவுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன. இதை சற்றும் எதிர்பார்க்காத இளம் பெண் ஜோ, அதன் பிறகுதான் மீண்டும் வீடியோவில் மன்னிப்பு கேட்டார். 

மேலும், “நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்தது உண்மை தான் என்றும், இது தவறு என்று தெரிந்த பிறகு அவ்வாறு செய்வதை நான் நிறுத்தி கொண்டதாகவும்” அவர் கூறினார். எனினும், இளம் பெண் ஜோவுக்கு எதிரான புகார்கள் அங்கு குவியத் தொடங்கி உள்ளதால், அவருக்கு சட்ட சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம், அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.