உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ukraine

உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் நேற்று அறிவித்தார். 

இந்நிலையில் இந்த அறிவிப்பு காரணமாக, உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்தநிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி பேசுகையில், உக்ரைன் தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் ரஷ்யாவின் அது தொடர்பான அறிவிப்புகளை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். ரஷ்ய கூட்டமைப்புடன் உக்ரைனின் எல்லையில் பதற்றம் அதிகரிப்பது ஆழ்ந்த கவலைக்குரிய விஷயம்.இந்த முன்னேற்றங்கள் பிராந்தியத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சாத்தியம் உள்ளது.

அதனைத்தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அவசியம். 20,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மற்றும் குடிமக்கள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளிலும், அதன் எல்லைப் பகுதிகளிலும் வாழ்கின்றனர். இந்தியர்களின் நலனே எங்களுக்கு முன்னுரிமை. அனைத்து தரப்பினரும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கான இன்றியமையாத தேவையை நாங்கள் வலுவாக வலியுறுத்துகிறோம். அதன்மூலம் பரஸ்பர இணக்கமான தீர்வு விரைவில் எட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பேசிய அவர் உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.