அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தனது பதவி காலத்தில், 30,573 பொய்களை பொது வெளியில் பேசியுள்ளார் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 


டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தல் பிரசாரம் செய்ய தொடங்கியத்திலிருந்து, தனது பதவிக்காலம் முடியும் வரை ஏராளமான பொய்யான கருத்துகளையும், தகவல்களையும் பேசி, மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார் என்று அந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.

அவர் அதிபராக பதவி ஏற்ற முதல் வருடத்தில் சராசரியாக நாள் ஒன்றிற்கு ஆறு பொய்யான தகவல்களை கூறியுள்ளார். இரண்டாவது ஆண்டில் அந்த பொய் 16 என்றும் மூன்றாவது ஆண்டில் 22 என்றும், கடைசி ஆண்டில் சராசரியாக 39 தவறான தகவல்களை பேசியுள்ளார் என்கிறது அந்த ஆய்வு முடிவு. 


அவர் தெரிவித்த தவறாக தகவல்கள் மற்றும் கருத்துகள் பெரும்பாலும் அவரது டிவிட்டர் மூலமாகவே தெரிவித்து உள்ளார். அமெரிக்கவின் மோசமான சுகாதார உட்கட்டமைப்புக்கு முன்னாள் அதிபர் ஒபாமா தான் காரணம் என்று சொன்ன பொய் தான், டிரம்பின் கூறியதில் மிகப்பெரிய பொய் என்கிறது அந்த ஆய்வு. மொத்த பொய்களின் எண்ணிக்கை 30573. 
மேலும் டைம் இதழில் அட்டைப்பக்கத்தில் அதிக முறை வந்த அதிபர் என்ற பெருமையும் படைத்துள்ளார் டிரம்ப்.