12 வயது மகனின் “திருநங்கையாக மாறும்” ஆசையை, அவரது தாயார் நிறைவேற்றி வைத்துள்ள சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக வல்லரசாகத் திகழும் அமெரிக்காவில் தான், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரைச் சேர்ந்த சாலி கோமர் என்ற 44 வயது பெண், அங்கு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு, 12 வயதில், சோய் வில்லா என்ற மகன் இருக்கிறார். அவர், அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

தன் மகன் மீது அதிக பாசம் வைத்திருந்த தாய் சாலி கோமர், தன் மகனின் நடவடிக்கைகளைக் கவனித்து உள்ளார். அப்போது, கடந்த சில வாரங்களாகவே 
மகனின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் இருந்ததை அவர் கண்டுபிடித்திருக்கிறார்.

அதே நேரத்தில், 12 வயது மகன் இளம் வயதை நெருங்கி வருவதால், ஆணுக்கு உடைய பாலின குணங்கள் மேலோங்கிவிடக் கூடாது என்பதற்காக, hormone blockers யை, அவர் பயன்படுத்தி வந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், அந்த 12 வயது சிறுவனின் உடல் மற்றும் அன்றாட செயல்பாடுகளில் பெண்ணிற்கே உண்டான அறிகுறிகள் மற்றும், தான் பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை உள்ளிட்டவை மேலோங்கி இருக்கிறது.

இதனால், தன் மகனுக்குப் பிடித்த பொருட்களை எல்லாம் வாங்கித் தந்து, தனது மகனுக்குப் பிடித்த இடத்திற்கு அழைத்துச் சென்று தன் மகனிடம் அவர் மனம் விட்டுப் பேசி உள்ளார். அப்போது, மகனிடம் காணப்படும் மாற்றங்கள் குறித்தும், அவர் கேட்டிருக்கிறார்.

அப்போது, ஆணாக பிறந்த மகன் சோய் வில்லாவுக்கு ஹார்மோன்களில் சில மாற்றங்களின் மாற்றத்தால், தன்னை ஒரு பெண்ணாக உணரத் தொடங்கி உள்ளதை, தனது தாயாரிடம் அந்த சிறுவன் தெரிவித்து இருக்கிறான். 

குறிப்பாக, “சக பெண்களைப் போலவே தனக்கும் மார்பகங்கள் வேண்டும்” என்ற ஆசையையும், அவரது தாயாரிடம் அந்த சிறுவன் கூறியிருக்கிறான்.

இதனைக் கேட்டு சற்று அதிர்ச்சியடைந்த அந்த தாய், பிறகு நிதானத்திற்கு வந்து மகனின் இந்த ஆசைக்கு முழு மனதுடன் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, பெண்கள் உடுத்தும் ஆடைகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றையும் அவர் புதிது புதிதாக வாங்கிக் கொடுத்து, தனது மகன் மனம் 
தளரவிடாமல், தன்னம்பிக்கையும் அளித்திருக்கிறார்.

முக்கியமாக, “தன்னுடைய பிறப்பு உறுப்பு அறுவை சிகிச்சையும் இப்போதே செய்ய” அந்த சிறுவன் விரும்புகிறார். ஆனால், அதற்கு 18 வயது நிரம்பி இருக்கும் வேண்டும் என்றும், மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். 

இதனால், தனது 11 வயது வரை, ஆணாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வந்த அந்த சிறுவன், இந்த ஒரு வருட காலத்தில், திருநங்கையாக மாறி, பிறப்பு உறுப்பு அறுவை சிகிச்சை வரை சிந்திப்பது, அந்த சிறுவனின் தாயாரை மட்டுமல்லாது, அந்நாட்டு மக்களையும் கடும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

எனினும், தனது மகனின் ஆசையே எனக்கு முக்கியம் என்றும், அவனுடைய மகிழ்ச்சியே எனக்குப் பிரதானம் என்றும், அந்த சிறுவனின் தாயார் கூறியிருக்கிறார். இந்த செய்தி, இணையத்தில் தற்போது வைரலாக தொடங்கி உள்ளது.