ஆண் நண்பர் வீட்டின் பாதாள அறையில் நிர்வாணமாக இருந்த இளம்பெண் மீட்கப்பட்டுள்ளார்.

sexual harassment

காணாமல் போனதாக தேடப்பட்ட வந்த 19 வயது இளம்பெண் தனது ஆண்  நண்பர்  வீட்டில் நிர்வாணமாக மீட்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆன்லைன் மூலம் சந்தித்த நபரால் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது மாணவியான மடைலின் திடீரென்று காணாமல் போனார். இது குறித்து குடும்பத்தினர் கொடுத்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தினர். கடைசியாக மடைலின்  டிசம்பர் 13 அன்று தங்குமிடம் ஒன்றின் சிசிடிவியில் பதிவாகியுள்ளார்.  அதன்பின்னர் மடைலினை காணவில்லை. ஆனால் மடைலின் செல்போனில் இருந்து டிசம்பர் 14ம் தேதி குடும்ப உறுப்பினர்களுக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் நான் உங்களை நேசிக்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. 

பின்னர் அதனைத்தொடர்ந்து அந்த செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. செல்போன்  டவரை ஆராய்ந்த போலீசார் கடைசியாக அது உபயோகப்படுத்தப்பட்ட பகுதிக்கு சென்றனர். கிட்டத்தட்ட 500 பேரின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் சரியாக குறிப்பிட்ட இடத்தை  கண்டுபிடித்து பிரவுன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அந்த வீட்டில் தான் மட்டுமே இருப்பதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். ஆனால் வீட்டின் அருகே மடைலினின் ஐடி கார்டு கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து ப்ரவுனின் வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அதில் வீட்டில் பாதாள அறையில் நிர்வாணமாக மடைலின் கிடந்துள்ளார்.  உடனடியாக மடைலினை மீட்ட போலீசார் ப்ரவுனிடம் விசாரணை நடத்தினர். 

மேலும் விசாரணையின்படி பிரவுனும் மடைலினும் சேட்டிங் செயலி ஒன்றில் நண்பர்களாகியுள்ளனர். இதனையடுத்து இருவரும் சந்தித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். தன்னுடைய வீட்டுக்கு மடைலினை அழைத்த ப்ரவுன், அவரிடம் உடலுறவு கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். மடைலின் முடியாது என மறுக்கவே அவரை பல்வேறு விதங்களில் மிரட்டி கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். மடைலின் செல்போனையும் பறித்துள்ளார். அதற்கு முன்பாகவே குடும்பத்தினருக்கு I  Love  You என மடைலின் மெசேஜ் அனுப்பியுள்ளார். 

இதனையடுத்து பிரவுன் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை வழக்குகள் பாய்ந்துள்ளன. முகம் தெரியாத நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வரும் நிலையில் அறிமுகம் இல்லாதவர் வீட்டுக்கு மடைலின் தனியாக சென்றதே குற்றவாளிக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேற்கொண்டு போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.