“இனி, ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் அமீரகம் என்று என்று பிரகடனப்படுத்துவோம்” என்று, தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பாலான பகுதிகளைக் கடந்த ஒரே வாரத்தில் தலிபான்கள் கிட்டதட்ட கைப்பற்றி உள்ளனர். தற்போது, அந்நாட்டின் தலைநகர் காபூலையும், இன்று தலிபான்கள் சுற்றி வளைத்து கைப்பற்றி இருக்கிறார்கள்.

அதே நேரத்தில், “தலைநகர் காபூலில் தாக்குதல் நடத்தி கைப்பற்றப்போவதில்லை என்றும், அமைதியான அதிகார மாற்றத்திற்காகக் காத்திருக்கிறோம்” என்றும், தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுகைல் சாஹீன் தற்போது செய்தி வெளியிட்டிருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில், அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்குப் பின்னர், அங்கு கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது. 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ஆயிரம் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக தற்போது ஐ.நா கூறியிருக்கிறது. 

மேலும், அங்கு தலிபான்களை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு படைகள் திணறி வருகின்றன. இதனால், தலிபான்களோ முக்கிய நகரங்களைக் கைப்பற்றித் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். 

தற்போதைய நிலையில், அந்நாட்டில் தலிபான்கள் வசம் ஆப்கான் நாட்டின் பெரும் பகுதி சென்றுவிட்டது. இதன் காரணமாக, அந்நாட்டில் மிக அதிகமான பெண்கள் தான் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

முக்கியமாக, அந்நாட்டில் 10 மாகாணங்களின் தலைநகரங்களை தாலிபான்கள் மிக விரைவாகவே கைப்பற்றி உள்ளனர்.

இதன் மூலமாக ஆப்கானிஸ்தான், தாலிபான்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் அதிகாரப்பூர்வமாக செல்வது தற்போது உறுதியாகி உள்ளது. 
 
அதாவது, கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை, தாலிபான்கள் தற்போது மீண்டும் கைப்பற்றி உள்ளனர்.

இந்த சூழலில் தான், ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி, அந்நாட்டை விட்டு  வெளியேறினார். அஷ்ரப் கானி, தஜிகிஸ்தானுக்கு தப்பியோடி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஆனால், “ரத்த வெள்ளம் ஓடுவதைத் தவிர்க்கவே வெளியேறியதாக” ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதாக, முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி தகவல் வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றி இருக்கும் நிலையில், உலக நாடுகள் பலவும் காபூலில் இருந்த தங்களது தூதரகத்தை மூடி உள்ளன.  
இதனால், ஆப்கானிஸ்தானிலுள்ள சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை சொந்த நாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் பல உலக நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மிக முக்கியமாக, இன்னம் ஓரிரு தினங்களில் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தைத் தாலிபான்கள் கையில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு,  “ 'இனி, ஆப்கானிஸ்தான் “இஸ்லாமிக் அமீரகம்' என்று என்று பிரகடனப்படுத்தப்படும்” என்றும், தாலிபான்கள் தற்போது அறிவித்துள்ளனர்.