இலங்கையின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து உள்ள மகிந்த ராஜபக்சே, தனது குடும்பத்துடன் தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அந்நாட்டு மக்கள் மிக கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், மிக கடுமையான பொருளாதார நெருக்கடியால் இலங்கை தற்போது தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. 

இதன் காரணமாக, இலங்கையில் தற்போது மக்கள் புரட்சி ஏற்பட்டு, ஆளும் கட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி, பிரதமர் பதவி விலக கோரி, கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த புரட்சி தீ, நேற்றைய தினம் உச்சக்கட்டமாக பற்றி எரிந்தது. 

இதனால், இலங்கையில் காணும் இடங்மெல்லாம் பொது மக்களின் போராட்டங்கள் யாவும் போர் களம் போல் காட்சி அளித்தன.

குறிப்பாக, ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இப்படி ஒரு மோசமான நிலைக்கு காரணம் என்று கூறி, அந்நாட்டின் எதிர்க் கட்சியினரும், பொது மக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இப்படியாக, பல தரப்பில் இருந்தும் நெருக்கடி மிக கடுமையாக முற்றிய நிலையில், அங்கு போராட்டம் இன்னும் தீவிரமாகி நிலமை இன்னும் மோசமானது. இதனால், கொழும்பு மற்றும் தெற்கு மாகாணங்களில் ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட நிலையில், நேற்றைய தினம் இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

எனினும், ராணுவத்தின் அதிரடியான நடவடிக்கையும் தாண்டி, இலங்கையில் இன்றைய தினம் கலவரங்கள் வெடித்த நிலையில், வேறு வழியில்லாமல் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே, நேற்றைய தினம் பதவி விலகினார்.

முக்கியமாக, மகிந்த ராஜபக்சே பதவி விலகளைத் தொடர்ந்து, இலங்கை அமைச்சரவை கலைக்கப்பட்டது. 

குறிப்பாக, நேற்றைய தினம் ராஜபக்சே ஆதரவாளர்கள் - இலங்கை அரசு எதிர்ப்பாளர்கள் இடையே வெடித்த மோதலால் கொழும்பில் பதற்றம் அதிகரித்து, “சொந்த ஊரில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து, பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ராஜபக்சே மீது போராட்டக்காரர்கள் குற்றசாட்டிய நிலையில், “கொழும்பில் உள்ள ராஜபக்சே கட்சி அலுவலகத்துக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து” எரித்தனர். இதனால், அங்கு பெரும் பதற்றம் தொற்றிக்கொண்ட நிலையில், பொது மக்களைப் பார்த்து துப்பாக்கியால் சுட முயன்ற இலங்கையின் ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்.பி.  ஒருவர், பொது மக்களால் அடித்தே கொல்லப்பட்டார். இதனால், அங்கு இன்னும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

அதன் தொடர்ச்சியாக, மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று, இலங்கை எதிர்க்கட்சிகள் தற்போது முழக்கங்களை முன்னெடுத்து வருகின்றன.

இதற்கு காரணம், “இலங்கை அரசுக்கு எதிராக அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டத்தில், மகிந்த ராஜபக்சே வன்முறையை தூண்டியதாக” இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. 

“வன்முறையை கட்டவிழ்த்து விட்டதற்காக, ராஜபக்சே கைது செய்யப்பட வேண்டும்” என்றும், எதிர்க்கட்சிகள் தற்போது தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதனால், “பொது மக்கள் கொந்தளிப்பையடுத்து, இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சேவின் குடும்பம் வெளிநாடு தப்பி ஓட திட்டமிட்டிருப்பதாக” அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால், அங்குள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்ட அந்நாட்டு மக்கள், அங்கு கடும் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் தான், 'பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே, தனது குடும்பத்துடன் தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் ஏற்கனவே வெளியேறி விட்டார்” என்கிற செய்தியும், தற்போது வெளியாகி, அது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளன.

மிக முக்கியமாக, “இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தனது மனைவுயுடன் இன்று காலை திருகோணமலைக்கு தப்பிச் சென்று அங்கு தங்கியிருப்பதாக” தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது நாமல் ராஜபக்ச குடும்பமும் தப்பிச் செல்லும் வீடியோவும் வெளியாகி, இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.