கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள்  தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் அதிபர் கோத்பய ராஜபக்சே.

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்துபோனதால் இறக்குமதி பாதித்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை விஷம் போல ஏறி வருகிறது. எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.
 
இந்த பொருளாதார நெருக்கடி,  தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு உள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில், சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன் ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் திரண்டனர். பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தவறியதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் முழங்கி போராட்டம் நடத்தினர்.

மேலும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள்  தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் அதிபர் கோத்பய ராஜபக்சே. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் படும் இன்னல்களைச்  சுட்டிக்காட்டி  அந்நாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.  

அன்றாட தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடும் உயர்ந்திருக்கிறது. காகிதம் இல்லாததால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூட நடத்த முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்துக்கு ஸ்தம்பித்துள்ளது.

அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கூறியதாவது: இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே  மே 1-ம் தேதி முதல் பதவியிலிருந்து விலகுவதாகக்கூறி அவர் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தில்  உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்காக மக்கள் வரிசையில் நிற்பது வேதனை அளிப்பதாக ரோஷன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னதாக பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் ராஜபக்சேவை பதவி விலகக்கோரி, அந்நாட்டு மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக  பல்வேறு பகுதிகளில் அவரச நிலை  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில்  அமைச்சர் ரணசிங்கே பதவி விலகியது இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக  பார்க்கப்படுகிறது.