டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கிட்டதட்ட 111 நாடுகளில் பரவி உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா என்னும் கோரிப் பிடியில் இருந்து இன்னமும் உந்த உலக நாடும் முழுமையாக விடுபடவில்லை. ஆனால், அதற்குள் நாளுக்கு நாள் புதிது புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் குறித்து தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

கொரோனாவின் 2 அலை, 3 வது அலை என்று பரவத் தொடங்கி, 4 வது அலையும் இன்னம் சில மாதங்களில் வெளிவர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சூழல் இப்படி இருக்கையில், சமீபத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ், அதிக வீரியம் கொண்டது என்று கண்டறியப்பட்டது. 

ஆனால், அதன் தொடர்ச்சியாக, டெல்டா வகை வைரசை விடவும் பயங்கரமான லாம்ப்டா வகை கொரொனா வைரஸ், உலகின் 30 நாடுகளில் வேகமாகப் பரவி உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த நிலையில், டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கிட்டதட்ட 111 நாடுகளில் பரவி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உலக மக்களை கடும் பீதியடைச் செய்து உள்ளது.

உலக அளவில் கடந்த வாரம் வரை சுமார் 30 லட்சம் பேர் வரை இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

ஆனால், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம் ஆகும். அதே போல், உயிரிழப்பும் 3 விழுக்காடு தற்போது அதிகரித்து இருக்கிறது. 

அத்துடன், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிகரித்து உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்க விடுத்து உள்ளது. 

குறிப்பாக, கொரோனா பாதிப்புகளைப் பொறுத்தவரையில் பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மிகவும் அதிகரித்த வண்ணம் காணப்படுவது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

மேலும், பொது மக்களிடம் மிகவும் எளிதாகப் பரவக் கூடிய புதிய வகையான டெல்டா வகை வைரஸ் தொற்று பாதிப்புகள், கிட்டதட்ட 111 நாடுகளில் தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. 

இதனால், பொது மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவும் அணிய வேண்டும் என்றும், சரியான தகுந்த இடைவெளியை நிச்சயம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவற்றுடன், கிருமிநாசினி உபயோகித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

முக்கியமாக, “பொது மக்களிடம் மிகச் சரியான பாதுகாப்பு மற்றும் திட்டமிடல் இல்லையென்றால், கொரோனா தொற்று அதீத வேகத்தில் மேலும் பரவும் அபாயம் இருப்பதாகவும்” உலக சுகாதார மையம் கடுமையாக எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.