56 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 33 வயது கொடூர இளைஞருக்கு, அதிக பட்சமாக 1088 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டில் தான் ஒரே நபர் 35 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த 33 வயதான செலோ ஆபிராம் மாபுன்யா, வேலைக்கு எதுவும் செல்லாமல் திருடுவதையே பொழுதுபோக்காக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அதாவது, தென்னாப்பிரிக்கா நாட்டில் கடந்த கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான இந்த 5 ஆண்டு கால கட்டத்தில், தென்னாப்பிரிக்கா நாட்டில் சுமார் 56 வீடுகளை இரவு நேரங்களில் உடைத்துக்கொண்டு, அந்த வீட்டில் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்து இருக்கிறார் 33 வயதான செலோ ஆபிராம் மாபுன்யா.

இதில், கொடூரத்தின் உச்சமாக, அந்த 33 வயது கொள்ளையன், தான் கொள்ளையடித்த வீடுகளில் உள்ளவர்களைக் கட்டிப்போட்டு, அந்த வீட்டின் முன்னாடியே, அந்த வீட்டுப் பெண்களை, அவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

இப்படியாக, கடந்த 2014 டிசம்பர் முதல், 2019 மார்ச் வரை கிட்டதட்ட 56 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களின் வீடுகளில் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார். இந்த பாலியல் பலாத்காரம் சம்பவமானது, வயது வரம்பின்றி, அனைத்து தரப்பு வயதினரும் இதில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 14 வயது மற்றும் 55 வயதான பெண்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த அந்நாட்டு போலீசார், செலோ ஆபிராம் மாபுன்யாவை கடந்த 2019 ஆம் ஆண்டு அதிரடியாகக் கைது செய்தனர்.

அத்துடன், அவரை அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். இது தொடர்பான வழக்கு, அந்நாட்டின் பிரிட்டோரியா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான அனைத்து கட்ட விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், வீடுகளில் கொள்ளையடித்து, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, அந்த குற்றவாளிக்கு அதிகபட்சமாக 1088 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அந்நாட்டின் பிரிட்டோரியா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த 1088 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமல்லாது, 5 ஆயுள் தண்டனையும் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரிட்டோரியா உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

இந்த தண்டனையை வரவேற்றுள்ள, தென்னாப்பிரிக்க நாட்டு காவல் துறையினர், இதனைக் கொண்டாடி உள்ளனர்.

மேலும், காவல் துறை சார்பில் இந்த வழக்கை விசாரித்து குற்றவாளி செலோ ஆபிராம் மாபுன்யா, குற்றம் செய்ததற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்து தண்டனை வாங்கி கொடுத்தமைக்காக, விசாரணை அதிகாரி கேத்தரினுக்கு அந்நாட்டு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு, அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.