பல 100 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் வந்த சரக்கு கப்பல், திடீரென்று கடலில் மூழ்கி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, ஜெர்மனி நாட்டில் இருந்து கடந்த மாதம் சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டது. அந்த சரக்கு கப்பலானது, சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான சொகுசு கார்களை சுமந்துகொண்டு அமெரிக்காவை நோக்கி புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்தது. 

அந்த கப்பலில் பல 100 கோடி ரூபாய் மதிப்பிலான பெண்ட்லிஸ், புரொஷீஸ், பென்ஸ், லம்போகினி, வெல்ஸ்வாகன் உள்பட 100 க்கணக்கான வகைகளில் 4 ஆயிரம் சொகுசு கார்கள் அதில் இருந்து உள்ளன. 

அந்த கப்பலானது, அட்லாண்டிக் கடலில் போர்சீகல் நாட்டின் அசொரிஸ் தீவு என்னும் பகுதியின் அருகே வந்துகொண்டிருந்தது. அதாவது, சரியாக, அந்த கப்பலானது கடந்த 16 ஆம் தேதி சென்றுக்கொண்டிருந்த போது, அந்த கப்பலில் தீடிரென்று தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த கப்பலில் பயணித்த சக ஊழியர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை.

அத்துடன், இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போர்சீகல் கடற்படையினர், விரைந்துச் சென்று கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

அத்துடன், அந்த கப்பலில் சிக்கிய 16 பேர் கொண்ட குழுவினரையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர்.

எனினும், அந்த சரக்கு கப்பலில் தீ மளமளவென பரவியதால், தீயை அணைக்கும் முயற்சிகள் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து நீடித்து வந்தது. அதே நேரத்தில், அந்த கப்பலில் ஏற்பட்ட தீயானது, கட்டுக்கடங்காமல் தொடர்ந்து பற்றி எரிந்துகொண்டே இருந்ததால், அந்த தீயை அணைக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில் தான், தீ பற்றி எரிந்த அந்த சரக்கு கப்பல் முன்னதாக அட்லாண்டிக் கடலில் அப்படியே மூழ்கி உள்ளது. 

இதனால், அந்த சரக்கு கப்பலில் இருந்த சுமார் 4 ஆயிரம் சொகுசு கார்களும், அந்த அட்லாண்டிக் கடலில் அப்படியே மூழ்கி உள்ளன. 

அதன்படி, அட்லாண்டிக் கடலின் அடியில் கிட்டதட்ட 3.5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த சரக்கு கப்பல் மூழ்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரிகள், “இந்த சரக்கு கப்பலில் இருந்து இது வரை எரிபொருள் கசிவு ஏற்படவில்லை” என்றும், தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே, பல 100 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் சென்ற சரக்கு கப்பல், அட்லாண்டிக் கடலில் மூழ்கிய சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.