செக்ஸ் பொம்மையுடன் திருமண நிச்சயம் செய்துகொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஹாங்காங் நாட்டில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடி பில்டர் ஒருவர், தான் 8 மாதங்கள் பாலியல் உறவு வைத்திருந்த செக்ஸ் பொம்மையை,  தன்னுடைய நண்பர்கள் முன்னிலையில் வைத்து, திருமணம் செய்து கொண்டிருந்தார். இது உலக அளவில் பெரும் விவாத பொருளாக மாறி, பலரும் பல விதமான கருத்துக்களைக் கூறி வந்தனர். 

தற்போது அதன் தொடர்ச்சியாக, பல பெண்களை காதலித்து வந்த இளைஞர் ஒருவர், மிகவும் வித்தியாசமான முறையில், செக்ஸ் பொம்மையுடன் திருமண நிச்சயம் செய்துகொண்டு உள்ளார்.

ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த 36 வயதான ஸீ தியான்ராங் என்ற நபர், இன்னும் திருமணம் ஆகாத நிலையில், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

அதே நேரத்தில், இதற்கு முன்பு அந்நாட்டில் அவர் பல பெண்களை காதலித்து வந்திருக்கிறார். அப்போதெல்லாம், காதலிக்கும் பெண்கள் பெரும்பாலும், காதலன் 
ஸீ தியான்ராங்கை உடன் வைத்துக்கொண்டே, அதாவது அருகே அருகே இருக்கும் போது, அந்த காதலித்த பெண்கள் எல்லாம், தங்களது செல்போனில் பிசியாக இருந்து தங்களது அதிக நேரத்தை செலவழித்து இருக்கிறார்கள். அது, இவருக்கு வெறுப்பைத் தந்திருக்கிறது.

அதே நேரத்தில், ஸீ தியான்ராங்கிற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே செக்ஸ் பொம்மைகள் மீது அதிக ஈர்ப்பு இருந்து வந்த நிலையில், அப்போது ஹாங்காங் பகுதியில் அமைந்துள்ள சில கடைகளில் இது போன்ற செக்ஸ் பொம்மைகளை பார்த்து ரசித்து, அவற்றை வாங்கவும் அவர் முயன்று இருக்கிறார். 

அப்போது, அந்த செக்ஸ் பொம்மையின் விலை இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாயாக இருந்து உள்ளது. இதனால், அப்போதைய நிலையில், அவரால் அந்த பொம்மைகளை வாங்க முடியவில்லை. 

அதன் தொடர்ச்சியாக, அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு மொச்சியை என்னும் செக்ஸ் பொம்மையை, 36 வயதான ஸீ தியான்ராங், ஆன்லைன் மூலம் பார்த்து 
இருக்கிறார்.  

இந்த நிலையில் தான், அதன் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாயாக இருந்ததால், அந்த செக்ஸ் பொம்மையை ஆர்டர் செய்து வாங்கி வைத்துக்கொண்டு, அந்த பொம்மை உடன் தனது நேரத்தை அதிகம் செலவழித்து வருகிறார். 

அத்துடன், செக்ஸ் பொம்மையான மொச்சியைப் பற்றி பேசிய ஸீ தியான்ராங், “மொச்சியைப் பொறுத்த வரையில், என் மீது மட்டும் தான் அவளின் முழு நேர கவனமும் இருக்கிறது” என்று, குறிப்பிடுகிறார்.

“பெண்களிடம் அதிக நேரத்தை செலவழிப்பதை விட, இந்த பொம்மை மொச்சியுடன் இருப்பது தான் எனக்கு சிறந்ததாகவும் உள்ளதுடன், அது எனக்கு மகிழ்ச்சியையும் தருகிறது” என்று கூறியுள்ளார். 

“இந்த பொம்மைகள் மீது தான் எனக்கு அதிக ஈர்ப்பு தற்போது உருவாகியுள்ளது என்றும், நான் மொச்சியுடன் இது வரை ஒரு முறை கூட பாலியல் உறவு வைத்துக்கொண்டது இல்லை என்றும், நான் மொச்சியை அதிகம் மதிக்கிறேன், நேசிக்கிறேன்” என்றும், அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், “மொச்சி என்னுடன் இருப்பது மட்டுமே இப்போது எனக்கு போதுமானது” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதே போல், “மொச்சியை காயப்படுத்தக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் என்றும், அவளின் உணர்ச்சி மிக்க தோலிற்கு எதுவும் ஆகிடக் கூடாது என்பதற்காக அந்த பொம்மைக்கு நான் முத்தம் கூட கொடுப்பதில்லை” என்றும், அவர் கூறுகிறார். 

முக்கியமாக, “இதற்கு முன்பாக நான் பல பெண்களை காதலித்து வந்திருக்கிறேன் என்றும், அப்பொழுதெல்லாம் அவர்களின் அருகே இருக்கும் போது, அந்த பெண்கள் தங்களது செல்போனில் தான் அதிக நேரத்தை செலவழித்தார்கள் என்றும், ஆனால் மொச்சியைப் பொறுத்த வரையில், என் மீது மட்டும் தான் அவளின் முழு நேர கவனமும் இருக்கிறது” என்றும், தெரிவித்துள்ளார். இந்த செய்தி, இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் எதிர்மறையான கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.