பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை கல்யாணம் செய்து கொள்ள அனுமதிக்கும் சட்டத்திற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்து உள்ளன.

தென்னாப்பிரிக்காவில் இப்படி ஒரு விநோத சட்டத்திற்கு எதிரான கண்டனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.

தென்னாப்பிரிக்கா நாட்டில் கடந்த பல ஆண்டுகாக மற்ற உலக நாடுகளுடன்  ஒப்பிடுகையில், மிகவும் தாராளவாத அரசியலமைப்புகளில் ஒன்றாக அந்த நாட்டில்
இருக்கிறது.

அதன் படி, தென்னாப்பிரிக்கா நாட்டில் ஆண்கள் பல திருமணங்கள் செய்து கொள்வதையும், ஒரே பாலின திருமணங்களையும், அந்நாட்டின் சட்டங்கள் அனுமதி அளிக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது அந்நாட்டில் பாலின உரிமை ஆர்வலர்கள், “பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கணவர்களாக வைத்துக் கொள்ள சட்டப்பூர்வ அனுமதி அளிக்குமாறு” அந்நாட்டின் அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். 

இந்த கோரிக்கையானது, தென்னாப்பிரிக்கா நாட்டில் சட்டப்பூர்வமாக்கப்படுவது குறித்து, அந்நாட்டின் உள்துறை பாலிண்ட்ரி இந்த திட்டத்தை தற்போது முன்மொழிந்து இருக்கிறது. 

இதனால், அந்நாட்டின் சில மதக் குழுக்கள் மற்றும் பழமைவாதிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதாவது, “தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில், ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் பாலிண்ட்ரி சட்டம் முன்னதாக தாக்கல் செய்யப்பட்டு” உள்ளது.

இதனால், “இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மூசா மெசெலு, அந்நாட்டின் செய்தியாளர்களிடம் பேசும் போது, “இந்த புதிய சட்டம், ஆப்பிரிக்க கலாச்சாரத்தை அழித்துவிடும் என்றும், அந்த மக்களின் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், “இப்படியான முறையால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அவர்களது அடையாளத்தை எப்படி அறிந்து கொள்வார்கள்? என்றும், பெண் எப்போதும் ஆணின் ஆளுமையாக முடியாது” என்றும், அவர் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

அதே போல், ஆப்பிரிக்க கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரெவரெண்ட் கென்னத் மெஷோ கூறும்போது, “ஆண்களுக்கு பலதரப்பட்ட திருமணம்  என்பது, அந்நாட்டில் காலம் காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை என்றும், ஆனால் ஒரு பெண்ணுக்கு பலதரப்பட்ட கணவர்கள் என்பது, இதற்கு முன்பும், இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது பழக்கம்” என்றும், அவர் தெளிவாக கூறியுள்ளார். 

“பல கணவர்களுடன் ஒரு பெண் இருக்க முடியாது என்றும், அது எப்படி சாத்தியம்?” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 

“அதற்கு காரணம், ஆண்கள் பொறாமை மற்றும் ஆதிக்க சக்தி குணம் கொண்டவர்கள் என்றும், இதனால், இந்த சட்டத்தின் புதிதாக பிரச்சனை தான் உருவாகும்” என்றும், அவர் தெளிவாக எடுத்துக்கூறி உள்ளார்.

இது  தொடர்பான விவாதம், அந்நாட்டின் இணையத்தில் பேசும் பொருளமாக மாறி உள்ளது. இது தொடர்பாக, பலரும் தங்களது எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.