அமெரிக்காவின் பிரபலமான முன்னாள் அழகி, சிறுவனுக்கு ஆபாசப் படம் அனுப்பிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு அழகியின் பின்னாடி தான் இளைஞர் கூட்டம் சுற்றிச் சுற்றி வரும். ஆனால், இங்கே ஒரே அழகியே சிறுவனின் அழகில் மயங்கி அவருக்கு ஆபாசப் படம் அனுப்பி, அவனை பாலியல் இச்சைக்குத் தூண்டி கைது செய்யப்பட்டுள்ளது, உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் கடந்த 2014 ஆம் ஆண்டு மிஸ் கென்டக்கி பட்டம் வென்று புகழ் பெற்றுத் திகழ்ந்தவர் ரம்சே கார்பென்டர் பியர்ஸ். அந்த அழகி பட்டம் மூலம் அமெரிக்காவில் பெரும்பாலான மக்களால் அதிகம் அறியப்பட்டவராக மாறினார். தோற்றத்தில் மிக அழகாகக் காணப்படும் ரம்சே கார்பென்டர் பியர்ஸ், அங்குள்ள கென்டக்கி யுனிவர்சிட்டியில் படித்து பட்டம் பெற்றார். 

அதன் பிறகு, மாடலிங் துறையில் நாட்டம் இல்லாமல் இருந்த ரம்சே கார்பென்டர் பியர்ஸ், அடுத்த சில ஆண்டுகளிலேயே திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, ஆசிரியர் தொழிலை விரும்பி ஏற்ற  ரம்சே, அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா கனாவா கவுண்டியில் உள்ள ஆண்ட்ரூ ஜாக்சன் நடு நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தார். 

பள்ளியில் ஆசிரியர் வேலை நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென அந்த அமெரிக்க அழகியின் மனசு சற்று சஞ்சலம் அடைந்துள்ளது. அதன் பிறகு, அவருக்குச் சோதனை தொடங்கி உள்ளது.

ரம்சே கார்பென்டர் பியர்ஸ் பாடம் நடத்தும் வகுப்பறையில் உள்ள ஒரு 15 வயது சிறுவனின் அழகில் மயங்கிய அந்த அழகி, அவனிடம் சற்று கூடுதலான அக்கரையுடன் பழகி வந்துள்ளார். அந்த அக்கரையே, நாளடைவில் தவற்றுக்கு வித்துள்ளது.

ஒரு நாள் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய அந்த 15 வயது சிறுவனுக்கு, அழகி ரம்சே கார்பென்டர் பியர்ஸ், தனது ஆபாசப் படத்தை அனுப்பி வைத்து உள்ளார். அந்த புகைப்படத்தை, சமூக வலைத்தளமான ஸ்நாப் சாட் மூலம் மாணவனுக்கு அந்த அழகி அனுப்பி உள்ளார். 

ஆனால், இந்த புகைப்படம் யாவும், மாணவனின் கண்ணில் படாமல், எதிர்பாராதவிதமாக அந்த மாணவனின் பெற்றோர் கண்ணில் பட்டுள்ளது. அந்த அழகியின் நிர்வாண புகைப்படங்களைப் பார்த்த மாணவனின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில், மொத்தம் 4 புகைப்படங்கள் வந்திருந்துள்ளன. அந்த 4 புகைப்படத்திலும், மேல் ஆடை இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த மாணவனின் பெற்றோர், அந்த அழகி ஆசிரியராக பணியாற்றும் பள்ளியின் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். 

இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் இவரிடம் அழைத்துப் பேசியதில், அது உண்மை என்று தெரிய வந்ததால், இந்த அழகியை வேலையை விட்டு நீக்கி உள்ளது பள்ளி நிர்வாகம்.

எனினும், அந்த மாணவனின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அழகி ரம்சே கார்பென்டர் பியர்ஸிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், போலீசாரிடமும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாகப் பேசிய அந்த அழகி ரம்சே, “இதற்கு முன்பு நான் இது போன்ற ஒரு தவறான நடத்தையில் ஈடுபட்டது இல்லை. எந்த தவறையும் செய்தது இல்லை. இனியும் நான் ஒரு போதும் இதுபோன்ற தவறை வாழ் நாளில் செய்யப் போவதில்லை. இது சத்தியம். நான் நல்ல முறையில் தான் பணியாற்றி வந்தேன். விடா முயற்சியுடன் பணியாற்றி வந்தேன். ஏதோ ஒரு புத்தியில் இப்படித் தவறு செய்து விட்டேன். இதனால், எனக்கு ஆசிரியர் வேலை பறிபோய் விட்டது. இந்த வழக்கால், நான் அளவுக்கு அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்” என்று வேதனையுடன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டார்.

எனினும், தன்னிடம் படித்த மாணவனுக்கு ஆபாசப் படம் அனுப்பிய குற்றத்திற்காக, அந்த அழகிக்கு தற்போது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதனிடையே, அமெரிக்காவின் பிரபலமான முன்னாள் அழகி, சிறுவனுக்கு ஆபாசப் படம் அனுப்பிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தற்போது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.