2030ம் ஆண்டுக்குள் கல்வி, உள்கட்டமைப்பு போன்றவற்றில் சிறந்த நாடாக சவூதி அரேபியாவை உருவாக்க திட்டமிட்டு விஷன் 2030 என்னும்  திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் சவூதி அரேபியா நாட்டின்  இளவரசரான முகமது பின் சல்மான். 


இதனையொட்டி 2030ம் ஆண்டுக்குள் உலகின் சிறந்த 200 பல்கலைக்கழகங்களுள் சவூதி அரேபியாவை சேர்ந்த 5 பல்கலைக்கழகங்களாவது இடம் பெற வேண்டும் என்பது சவூதி அரசின் குறிக்கோளாக உள்ளது. கல்வியில் பல்வேறு மாற்றங்களை செய்ய முடிவு செய்திருப்பதையொட்டி பல்வேறு நாடுகளின் வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றை சவூதி அரேபிய மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்படவுள்ளது. 


இதனையடுத்து சவூதி பாடத்திட்டத்தில்  ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்க சவூதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் யோகாவும் கற்றுத்தரப்பட உள்ளது. 


இதுகுறித்து பத்மஸ்ரீ விருது வெற்ற நௌஃப்  மார்வாய், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ சவுதி அரேபியாவின் புதிய விஷன் 2030 மற்றும் பாடத்திட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய தாராளமயமான மற்றும் சகிப்புத்தன்மையுள்ள தலைமுறையை உருவாக்க உதவும். ஆங்கில மொழியும் கற்றுத்தரப்பட உள்ளது.” என்றுள்ளார்.


மேலும் சவூதியில் பள்ளித் தேர்வில் இந்து மதம், புத்த மதம்,  மகாபாரதம், ராமாயணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளின் புகைப்படங்களையும் அவர் டிவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.